Monday, January 21, 2008

416. வெங்க்சார்க்கரும் இன்னும் சில முட்டாள்களும் - பாகம் 2 - இலவச கொத்தனாருக்காக

நான் எழுதிய முந்தைய பதிவுக்கு பதிலடி தரும் வகையில் நம்ம கொத்ஸ் (இலவச.கொத்தனார்) Politically correct-ஆ ஒரு பதிவு எழுதியிருக்கிறார், அவருக்கு வாழ்த்துக்கள்:)
"// .... //" இருப்பவை இ.கொ வின் கருத்துகள்.

//
அதனால நம்ம ஆட்கள் வழக்கம் போல உணர்ச்சிவசப்பட்டு கொந்தளித்து அடுத்தவனை முட்டாள் மூடன் என்றெல்லாம் திட்டி பதிவுகள் போடத் தொடங்கியாயிற்று. நம்ம பாலா போட்டு இருக்கும் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. ஆனா இந்த உணர்ச்சிகளை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த விஷயத்தை என்ன ஏதென்று பார்க்கலாமா?
//
செலக்டர்களை "முட்டாள்கள்" அப்டின்னு உணர்ச்சிவசப்பட்டு சொல்லலாமா என்று கேட்கிறார். உணர்ச்சிவசப்பட்டு கூறவில்லை. BCCIயின் கிரிக்கெட் தேர்வுக் குழு ஆதி காலத்திலிருந்து, கிரிக்கெட் அறிவும் அனுபவமும் இல்லாத, சார்புடைய முட்டாள்கள் நிறைந்ததாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. அவர்களுக்கு பிடித்த ஆட்டக்காரர்களைச் சேர்ப்பதுவும், சீனியர்களை பந்தாடுவதும் பல முறை நடந்துள்ளதை கிரிக்கெட்டை ஃபாலோ பண்ணுபவர்கள் அறிவார்கள் !!!

//
ஆனால் கம்பீர், கார்த்திக், உத்தப்பா, ரெய்னா என நல்ல தகுதியுடையவர்கள்தானே அணியில் இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பொழுதெல்லாம், 20-20 உலகக்கோப்பை உட்பட, சாதித்துக் காட்டியவர்கள்தானே இவர்கள்.
//
நான் ஏற்கனவே கூறியது போல ஒரு நாள் போட்டி, 20-20 அல்ல !!!! நீங்கள் கூறும் நால்வரில், இருவர் இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. மீதி இருவருக்கு பதில், சீனியர்கள் வேண்டும் ! எப்படியும் கார்த்திக் passenger-ஆகத் தானே இருக்கப்போகிறார்.

//
திராவிட்டும் லக்ஷ்மணும் டெஸ்ட் போட்டிகளில் எத்தனை முறை மூன்று ஓட்டங்கள் எடுக்க இடங்களில் இரு ஓட்டங்களும், இரு ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரே ஒரு ஓட்டத்துடனும் நின்றிருக்கிறார்கள்? இது மட்டுமே ஒரு 30 - 40 ஓட்டங்களாக மாறினால் அது வெற்றியை நிர்ணயிக்கும் அல்லவா?
//
இது தெரிந்தது தானே, ஆனால் இதற்கு பதிலாக ஒன்று கேட்க முடியும் !! ஃபீல்டிங் மட்டுமே வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கிறதா என்ன ? ஒரு பேட்ஸ்மன் முட்டை அடித்து விட்டு, 20-25 ரன்களை தடுத்து விட்டால் போதுமா ? டிராவிட்டுக்கு fitness இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

//அதே சமயம் நமது அடுத்த முக்கியமான இலக்கு 2011 உலகக் கோப்பை. அதற்கான அணியினை தயார் செய்வதில் நாம் முனைப்பாக இருக்க வேண்டும். இந்த இளைஞர்கள்தான் அந்த அணியின் முதுகெலும்பாக இருக்கப் போகிறவர்கள். அவர்களுக்கு அந்த போட்டிக்கு முன் எவ்வளவு அனுபவம் கிடைக்கிறதோ அவ்வளவு நல்லது.
//
இந்த concept-ஏ தவறு என்பது என் கருத்து. 2011-க்கு இப்போதிலிருந்தே தயார் செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுத்த ஹம்பக் !!! 20-20 வெற்றியை வைத்து இந்த இளைஞர்களை demi gods ஆக்க முயல வேண்டாம் ;-) அவர்களிடம் சரக்கு இருக்கிறது. ஆனால், போக வேண்டிய தூரமும் அதிகமே !!! 2011-இல், சச்சின், டிராவிட், யுவராஜ், தோனி ஆகிய நால்வருமே தேவை !

//சில மாதங்கள் முன்பு நம் நண்பர்களால் கிழவர்கள் என வர்ணிக்கப்பட்ட வீரர்கள்தான் பாகிஸ்தானோடும் சரி அவுஸ்திரேலியாவுடனும் சரி பட்டையைக் கிளப்பினார்கள். அது பற்றிய சத்தத்தையே காணும்.
//
உலகக்கோப்பை வெளியேற்றம் அவமானம் என்று தான் கூறினேனே ஒழிய, சீனியர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்றெல்லாம் கூக்குரல் நான் இடவில்லை. மேலும், ஒரு முறை கங்குலி, டெஸ்ட் போட்டிகளில் சரியாக விளையாடபோது (அதோடு, கொஞ்சம் அரசியல் செய்தபோது!), அவரை நீக்க வேண்டும் என்றும் எழுதியிருக்கிறேன். பெங்காலி பாபுக்கள் போல "கங்குலி தெய்வம்" என்ற கருத்து உடையவன் நானல்லன்... நான் கூறுவதெல்லாம், தகுதிக்கும் ஃபார்முக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே !!!!!!!

நிற்க, மேலும் சில கருத்துகள்:

1. சீனியர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டதற்கு, நவ்ஜோத் சித்துவும், கபிலும், ஜடேஜாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சித்து, கங்குலி நீக்கப்பட்டது குறித்து ஒரு திறந்த விவாதத்தில் தன்னுடன் மோதுமாறு "கர்னல்" வெங்சர்க்காருக்கு NDTV-யில் அழைப்பு விடுத்துள்ளார் !!! விவாதத்தில் தான் தோற்றால், இனி NDTV-யில் தோன்ற மாட்டேன் என்றும், வெங்க்சர்க்கார் தோற்றால் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2. தோனி கேட்ட (20-20 உலகக்கோப்பையை ஜெயித்த) டீமையே அவருக்கு வழங்க வேண்டும் என்ற பட்சத்தில், செலக்டர்களின் பங்கு என்ன ???? முன்னர், டிராவிட் விஷயத்தில் ஏன் அவர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை ??? தோனி என்ன, அதற்குள் அவ்வளவு பெரிய ஆள் ஆகி விட்டாரா ? தோனியும் அரசியல் செய்வது போல் தெரிவதால், இனி உருப்பட்டா மாதிரி தான் :(

3. தற்போதுள்ள தேர்வுக்குழுவில், டெஸ்ட் / ஒரு நாள் அனுபவம் உள்ளவர்கள் வெங்க்சார்க்கரும், ராஜுவும் மட்டுமே. மற்ற மூவரும், காலணாவுக்குத் தேறாதவர் என்பது உலகமறிந்த விஷயம் தானே ! மேலும், தாதாவை நீக்குவது பற்றி BCCI பெருந்தலைகளுக்கு தெரியாது என்பதையோ, அவர்களின் tacit approval இன்றி இது நடந்திருக்கும் என்பதையோ ஒருவர் நம்பினால், அவரைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் :)

இறுதியாக, நமது தேர்வாளர்கள் முட்டாள்கள் மட்டும் அல்ல, திமிர் பிடித்த, தலைக்கனம் கொண்ட கோமாளிகள் கூட !!!

எ.அ.பாலா

12 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !!!

Naufal MQ said...

டெஸ்ட் போட்டிகளில் நமது தோணி பேட் செய்வதை பார்த்தால் சிரிப்புத்தான் எனக்கு வருகிறது. :)

A Simple Man said...

Repeat :-)

said...

even a country like oz, that has a laudable bench strength is not afford to take chances against proven compaigners like hyden and even you are already hearing jacques is not langer and stuff like that. Certainly ganguly and dravid are big shoes who are comparable to warne and mcgrath of bowling.
Again, most of all, I endorse your worry abt dhoni- if he is involved in this he is not a good person and ultimately not going to make a good captain. he is not going to see what is good for the team instead he is gonna se whats good for him.

enRenRum-anbudan.BALA said...

fast bowler,
//டெஸ்ட் போட்டிகளில் நமது தோணி பேட் செய்வதை பார்த்தால் சிரிப்புத்தான் எனக்கு வருகிறது. :)
//
எனக்கு அழுகை வருகிறது ;-)

Jokes apart, தோனி கூட form-இல் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பெர்த்தில் அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட்டம் effective ஆக இருந்தது உண்மை தான் !

அபுல்,
நன்றி. :)

அனானி,
You have pointed out the crux of this issue, Let us wait and watch with our fingers crossed !!! Thanks...

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

என்ன, நம்ம கொத்ஸ் இந்தப் பதிவை இன்னும் பார்க்கலியா ??? திடீர்னு காணாம போயிட்டாரே :)

இலவசக்கொத்தனார் said...

வந்துட்டேன். மூணு நாளா லீவு. அதனால் கொஞ்சம் பிஸி. அப்புறம் இப்போதான் நம்ம பதிவில் எல்லாருக்கும் பதில் சொல்லி முடிச்சேன்.

இலவசக்கொத்தனார் said...

எனக்கு வயசாயிருச்சு போல! அதான் பொலிடிக்கலி கரெக்ட் பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுட்டேன்!!

//BCCIயின் கிரிக்கெட் தேர்வுக் குழு ஆதி காலத்திலிருந்து, கிரிக்கெட் அறிவும் அனுபவமும் இல்லாத, சார்புடைய முட்டாள்கள் நிறைந்ததாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. //

இந்த முறை அவ்வளவு மோசமில்லை என்றே தோன்றுகிறது. எப்பொழுதுமே நமக்கு தேர்வு செய்யப்படும் அணியில் முழு திருப்தி வரப்போவதில்லை. ஆனா இந்த முறை கங்குலி தவிர மற்ற தேர்வுகள் மோசமில்லை என்றே தோன்றுகிறது.

// நீங்கள் கூறும் நால்வரில், இருவர் இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. மீதி இருவருக்கு பதில், சீனியர்கள் வேண்டும் !//

நீங்கள் இருவர் எனச் சொல்கிறீர்கள், நான் மூவர் எனச் சொல்வேன். அப்புறம் இதில் 11 பேர்தானே ஆட முடியும். சீனியர்களை எடுத்தால் அப்புறம் ஆட வைத்தே ஆகணும் என்பதும் இருக்கே. எடுத்துட்டு ஆட விடாம பெஞ்சில் உட்கார வைப்பதை விட இப்படி செய்யறது நல்லதோன்னு கூட தோணுது.

//கார்த்திக் passenger-ஆகத் தானே இருக்கப்போகிறார்.//

சொல்ல முடியாது. அவர் ஆடுவார் என்றே தோன்றுகிறது.

//ஒரு பேட்ஸ்மன் முட்டை அடித்து விட்டு, 20-25 ரன்களை தடுத்து விட்டால் போதுமா ? டிராவிட்டுக்கு fitness இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.//

கட்டாயம். பாருங்க. அவங்க எப்பவும் முட்டை அடிக்க போறது கிடையாது. ஆனா எப்பவும் 20 -30 ரன் தடுப்பாங்க. நான் இந்த டெஸ்ட் சீரிஸ் முழுவதும் பார்த்தேன் திராவிட், கங்குலி ஓடியது ரொம்ப கம்மிதான். இருந்தாலும் என் கருத்து என்னவென்றால் அவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது அப்படி ஒன்றும் பெரிய தவறாகத் தெரியவில்லை என்பதுதான். இவர்கள் இம்முறை சரியாக ஆடாமல் மீண்டும் பழைய குருடி கதவைத் திறக்கப் போனால்தான் தவறு.

இன்னும் வரும்....

இலவசக்கொத்தனார் said...

//அவர்களிடம் சரக்கு இருக்கிறது. ஆனால், போக வேண்டிய தூரமும் அதிகமே !!! 2011-இல், சச்சின், டிராவிட், யுவராஜ், தோனி ஆகிய நால்வருமே தேவை !//

கரெக்ட். அதற்கு முன் அவர்கள் எவ்வளவு அனுபவம் பெறுகிறார்களோ அவ்வளவு நல்லது. அதைத்தான் செய்ய முயல்கிறார்கள். சச்சின் டிராவிட் அடுத்த உலகக்கோப்பை வரை இருப்பது சந்தேகம்தான். சச்சின் ஒரு உலகக்கோப்பை வேண்டும் என்ற வெறியில் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் திராவிட், கங்குலி எல்லாம் நோ சான்ஸ்.

//சில மாதங்கள் முன்பு நம் நண்பர்களால் கிழவர்கள் என வர்ணிக்கப்பட்ட வீரர்கள்தான்//

இது நீங்கள் சொன்னது இல்லை. வேற விஷயம். லூஸில் விடுங்க! :P

//தகுதிக்கும் ஃபார்முக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே !!!!!!!//

சரிதான். இல்லைன்னு சொல்லலை. நான் என் பதிவில் சொன்ன மாதிரி அவர்களுக்கும் முன் இரு வழிகள் இருந்தது. அவர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அது ஒன்றும் அவ்வளவு தவறான வழியாகத் தெரியவில்லை. அதற்கு இம்புட்டு ஆர்பாட்டமும் சத்தமும் தேவை இல்லை என்பதுதான் என் கருத்து. :))

இன்னும் வரும்....

இலவசக்கொத்தனார் said...

கடைசியாக

1) இந்த 'சித்து' விளையாட்டெல்லாம் நம்ம தீப்பொறி ஆறுமுகம் மேடையில் விடுக்கும் ஒத்தைக்கு ஒத்தை வந்து பாரு என்பது போல்தான். சும்மா ப்ரீயா விடுங்க. (அப்படி நடந்து அவர் இனிமே டீவியில் வராமல் இருந்தால் நல்லதுதான்!)

2) அது மட்டுமே காரணம் இல்லை. அவரோட கருத்துக்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவிற்குச் சென்ற டெஸ்ட் அணியில் அது போல கும்பிளேவின் கருத்துக்களுக்கும் மதிப்பு தரப்பட்டிருந்ததே. இதில் ரொம்ப ஒண்ணும் அரசியல் இல்லைன்னு நினைக்கறேன்.

3) //மற்ற மூவரும், காலணாவுக்குத் தேறாதவர் என்பது உலகமறிந்த விஷயம் தானே ! // அப்படி எல்லாம் ஒரேடியா மட்டம் தட்டக்கூடாது. எவ்வளவோ இடங்களில் நேரடியாக விளையாடாத பலர் நல்ல நிர்வாகிகளாகவோ பயிற்சியாளர்களாகவோ இருந்திருக்கிறார்கள். நான் பொதுவாகச் சொல்கிறேன். இவர்களைப் பற்றி மட்டும் இல்லை. மற்றபடி, இது பெருந்தலைகளுக்குத் தெரியாதென்றோ, கங்குலிக்குச் சொல்லாமல் பத்திரிகைகளுக்குச் சொல்லி இருப்பார்கள் என்றோ நான் சொல்லவில்லை.

//நமது தேர்வாளர்கள் முட்டாள்கள் மட்டும் அல்ல, திமிர் பிடித்த, தலைக்கனம் கொண்ட கோமாளிகள் கூட !!!//

முன்பு பல சமயங்களில் நானும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவ்வளவு மோசமில்லை என்பதே என் கருத்து. நல்ல வேளை இதோடு நிறுத்திக்கொண்டு ரயில் மறியல் எல்லாம் செய்யாது விட்டீர்களே!! :))

இலவசக்கொத்தனார் said...

ஆங்க்க்க். சொல்ல மறந்துட்டேனே. அம்புட்டுதாம்பா!! இந்த விளையாட்டு போரடிச்சாச்சு. உமக்கு ரெண்டு பதிவு, எனக்கொரு பதிவு கிடைச்சாச்சு.

அடுத்தது வேற என்ன பதிவு போடலாமுன்னு பார்க்கலாம். ஓக்கேவா?

enRenRum-anbudan.BALA said...

கொத்ஸ்,
பல பின்னூட்டங்கள் வாயிலாக அளித்த நீண்ட விளக்கத்திற்கு மிக்க நன்றி :)

சுருக்கமாக சில:
1. டிராவிட் கேப்டனாக இருந்தபோது அவர் கருத்துகளுக்கு செலக்டர்கள் மதிப்பளிக்கவில்லை
என்பது தான் சத்தியம் :)
2. கங்குலியை இப்போது நீக்கியதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை (ஜெலுசில்
சாப்பிடுங்கள் என்று கூற வேண்டாம்;-))
3. அவரை நீக்கியது பற்றி செலக்டர்கள் கங்குலியிடம் பேசியதாக எங்கும் நான்
வாசிக்கவில்லை !!!!

ஆட்டையை இத்துடன் நிப்பாட்டிக் கொள்வோம் :)))))

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails